சஜித்தின் முன்னணியுடன் ஒப்பமிடுவதற்கு ரணில் ஆயத்தம்!
சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியுடன் ஐ.தே.க ஒன்றுபட்டு செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியுடன் ஐ.தே.க ஒன்றுபட்டு செயற்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன சந்தானய கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவில் விமல் வீரவங்ச வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.
கேரளாவில் கலப்புத் திருமணம் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது பேசுகையில் களுகு அடி அடிப்பேன் என்று கூறி இருந்தார். இந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கேட்டிருந்தது. இவர்கள் இப்படி இருக்கையில் பொதுத்தேர்தலில் ஒன்றாக போட்டி இடுவது எப்படி என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இம்முறை பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று ஹிருனையா ஹேரத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கண்டி மாவட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள் அணைவரும் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் இணைகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையின் கீழ் நவ லங்கா நிதகஸ் பக்ஷய (NLNP) நாளை 6 ஆரம்பிக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இந்நிகழ்வு நாளை 10 மணிக்கு கோட்டே சோலீஸ் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக அறியக்கிடைகின்றது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதே ஐ.தே க இலக்கு என ஐ.தே.க கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் அதுதான் கட்சியின் உடைவை தடுக்கும் என்கிறார் சஜித் அணியினருக்கும் இது சம்பந்தமான தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிறைய வேளைப்பழுக்களுக்கு மத்தியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று எம் முன் வந்துள்ளது அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெறும் என்று கட்சியின் நிர்மான கர்த்தாவும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் இளைஞர்,யுவதிகள் மற்றும் அறிவுத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் இப்போது கதை பழைய பக்கம் திரும்பியுள்ளது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 95% மானோருக்கு பாராளுமன்றத்தேர்தளில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலர் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு.
உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கொவிட் - 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சகல மாவட்ட செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஐ.தே. க மற்றும் சமகி ஜன பலவேகய கட்சிகளுக்கிடையில் இருந்து வந்த பிரச்சினையை முடித்துக்கொள்வது சமபந்தமாக ஐ .தே கட்சியை தலைமை பொறுப்பை பாரம் எடுங்கள் என்று சமகி ஜன பலவேகய பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று முன்தினம் முன்னாள் சபாநாயகர் கருஜயசூர்யவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.