எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதே ஐ.தே க இலக்கு என ஐ.தே.க கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் அதுதான் கட்சியின் உடைவை தடுக்கும் என்கிறார் சஜித் அணியினருக்கும் இது சம்பந்தமான தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டேயில் உள்ள ஸ்ரீகொத்தா தலைமைக்காரியாலயத்தில் நேற்றிரவு நடந்த செயற்குழு கூட்டத்தில் சஜித் அணியினருக்கு அழைப்பு விடுக்கும் நேரத்திலேயே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதே இப்போதுள்ள தேவை என்றும் அதை எழுத்து மூலம் செய்து ஒப்பமிட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் theleader.lk கருத்து தெரிவிக்கையில் ரணில் விக்ரமசிங்க பொதுவான கொள்கையில் இருப்பதாகவும் அவர் கூட்டணியை விரும்பவில்லை என்றும் தெரிவிக்கின்றது.

ஐ.தே.க வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக ஐ.தே. க செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டால் கட்சியிலிருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றைய செயற்குழு கூட்டம் முடிந்த பின் ரணில் துபாய் சென்ருந்தார் அவர் நாளை நாடு திரும்புவதாக அறியக்கிடைக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி