எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஐ.தே. க மற்றும் சமகி ஜன பலவேகய கட்சிகளுக்கிடையில் இருந்து வந்த பிரச்சினையை முடித்துக்கொள்வது சமபந்தமாக ஐ .தே கட்சியை தலைமை பொறுப்பை பாரம் எடுங்கள் என்று சமகி ஜன பலவேகய பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று முன்தினம் முன்னாள் சபாநாயகர் கருஜயசூர்யவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கரு தலைவரானால் ஐ.தே க யுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவர் நேற்று 3 தேர்தல் தினணக்களத்திற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

let

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னமாக தொலைபேசியை தருமாறு கோரி ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல் தினைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது இப்படி இருக்கையில் எதிர்வரும் பொதுதேர்தலில் ஐ.தே கட்சி யானைச்சின்னத்தில் போட்டியிடுபவர்களின் பெயர்களை விரைவாக சேகரிக்குமாறு ஐ.தே.க பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடம் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மங்கள மற்றும் மலிக் ,ராஜிதவின் முயற்சி தோல்வியில்!

மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் சமகி ஜன பலவேகைய தலைவர் சஜித் ஐ.தே.க.தலைவர் ரணில் ஆகிய இருவருடனும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர் அந்தப் பேச்சுவார்த்தை கட்சியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையாகும் ஆனால் அது தோல்வியில் சென்று முடிந்ததுள்ளது.

ஐ.தே.க ஊடக பேச்சாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஐ.தே. க தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார் அதனால் நேற்று 3 சஜித்துடன் இருந்த ராஜித இன்று ரணிலுடன் சென்றுள்ளார்.

இணைவதற்கான எந்தக்காரணமும் இல்லை - நவீன்

இவ்வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவின் திசநாயக்க கூறுகையில் இப்போது இருக்கும் நிலையில் ஐ.தே. க சமகி ஜன பலவேகயவுடன் இணைவதற்கான எந்தத் தீர்மானமும் இல்லை என்றார்.

எது எப்படி இருப்பினும் ஐ.தே.க பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன கூறியுள்ளார்.

அகில ஐ.தே. க பொதுச்செயலாளர் பதவியை துறப்பார்

இவ்வேளையில் ஐ.தே.க பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு  தனது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகவுல்லதாக கூறியுள்ளார்.

சிறிலங்கா பொது ஜன பெரமுன SLPP தாமரை மொட்டு சின்னத்தில் போட்டி இடுகின்றது

இவ்வேளையில் சிறிலங்கா சுத்திரக்கட்சி மற்றும் சிறிலங்கா பொது ஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா நிதகஸ் பொது ஜன சந்தானய எனும் பெயரில் வருகின்ற பொதுத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டி இடவுள்ளனர்.

தேர்தலில் போட்டி இடுவதற்கான விபரத்தை தேர்தல்கள் செயலகம் விரைவில் அறிவிக்கும்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி