கண்டியில் இடம்பெற்றுவரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது, கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் திட்டும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“சரி சரி… போடா ம...! வந்துட்டான் சோ(சே)லைக்குள் நுழைய!” என்று, அந்த பொலிஸ் அதிகாரி, மேற்படி இராணுவ பொலிஸ் வீரரைத் திட்டியுள்ளார். இதை வீடியோ பதிவு செய்துள்ள ஒருவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது வைரலாகியுள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டம் 1 க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த இராணுவ அதிகாரி, பக்தர்கள் குறைவாக இருந்த வரிசை ஒன்றிற்கு மற்றொரு குழுவினரை அனுமதிக்க முயற்சித்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி, அந்த இராணுவ அதிகாரியை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி