எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் இளைஞர்,யுவதிகள் மற்றும் அறிவுத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் இப்போது கதை பழைய பக்கம் திரும்பியுள்ளது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 95% மானோருக்கு பாராளுமன்றத்தேர்தளில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கோட்டாவின் கட்சியில் புதிய முகங்கள் இல்லை பழையவர்களே செல்கின்றார்கள் முன்பு ஜனாதிபதி கோட்டாபய எதிர்வரும் பொதுதேர்தலில் இளைஞர்,யுவதிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Nalaka 2020.02.05

Theleader.lk  கிடைத்த தகவலின் படி இம்முறை தாமரை மொட்டுச்சின்னத்தில் போட்டியிடும் புது முகங்கள் இல்லை அதனடிப்படையில் ஒரு சிலருக்கே வாய்பளிக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் நாலக்க கொடகேவ,கலாநிதி சரித கேரத் சட்டத்தரணி லலித் பிசும் பெரேரா ஊடகவியலாளர் சன்ஜீவ எதிரிமாத்த சட்டத்தரணி மயூர விதானகே ஆகியோராவர்.

கோட்டாவின் கட்சியில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் கடற்படை இராணுவ அதிகாரி லேப்டினன்ட் கமாண்டர் யோசித்த ராஜபக்ச இம்முறை பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஜனாதிபதிதேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உதவி செய்த பிரபல வியாபாரி திலின் ஜயவீர காலி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

அதேபோல் கட்சியை இளைஞர் யுவதிகளிடம் எடுத்துச்சென்ற மிலிந்த ராஜபக்ச இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதாகவும் அறியக் கிடைக்கின்றது.

சஜித்தின் கட்சியில் பெரும்பான்மை இளைஞர் யுவதிகள்

Chatura 2020.02.05

இம்முறை பொதுத்தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியில் கூடுதலான இளைஞர் யுவதிகள் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி