எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் இன்று 26 மு.ப 10 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியக்கிடைகின்றது.

எகிப்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்தவர் என்ற வரலாற்றைப் பதிவு செய்தவர், ஹொஸ்னி முபாரக். சுமார் 30 வருடங்கள் தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளார். 2011-ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக எழுந்த `அரபு வசந்தம்’ என்ற மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.

பொருட்களின் விலை குறையாத நிலையில் மக்கள் விசனம் அடைந்திருப்பதாகவும் அரசாங்கத்தின் மேல் கடுமையான கோபத்தில் மக்கள்  இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பின்னர் கோட்டா ஜனாதிபதி சஜித் பிரதமர் என்றால் முன்னர் இருந்த ஆட்சியில் மைத்திரி - ரணில் முருகல் நிலை போல தொடர வாய்ப்புள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.தன்னால் முடிந்தளவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவரும் முன்னால் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 23 ம் திகதி கண்டியில் நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் தேர்தலில் சிவில் அமைப்புகள்,தமிழ் தேசியக் கூட்டணி,மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளுடன் கூட்டணி வைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது சஜித் பிரமதாசவின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக இம்முறை பொதுத் தேர்தலில் சமகி ஜன பலய கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டி இடுகின்றார்.

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத், பதவிவிலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதன் மூலம் மலேசிய அரசியல் திடீர் பரபரப்படைந்துள்ளது.

கொழும்பு சர்வதேச நிதி நகரம் (CIFC) நிறுவனம் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுக நகரம் இரண்டாவது முறையாகவும் சேதத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

கோட்டா மகிந்த அரசாங்கம் 100 நாட்கள் செல்வதற்குள் ஆட்டம் கண்டுள்ளதாக லிகினி பெர்னாந்து தெரவித்துள்ளார்.

புர்க்கா என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் உடையாகும் அப்படி இருக்கைளில் அதை தடை செய்ய இடமளிக்க முடியாது. அது முஸ்லிம் பெண்களின் உரிமையும் கூட புர்காவை தடை செய்தால் அது மனித உரிமை மீரலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்று 3 மாத காலத்திற்குள் நாடு பாரிய நெறுக்கடிக்குள் சிக்கியிருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ர மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டன் தங்கம் நிலத்தில் புதைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கனிம வளத்துறை இதை உறுதி செய்ததுடன், விரைவில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி