சர்வதேச நாணய நிதிய (IMF) ஊழியர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள், IMF-இன் விரிவாக்கப்பட்ட

நிதி வசதி (Extended Fund Facility) மூலம் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டத்தின் நான்காவது மீளாய்வை முடிப்பதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்.

இந்த மீளாய்வு IMF நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கவுள்ளது.

IMF அறிக்கையின்படி, திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் தொடர்ந்து வலுவாக உள்ளது மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது.

வருவாய் திரட்டல், இருப்பு சேமிப்பு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் எதிர்பார்த்தபடி முன்னேறி வருகின்றன, அதே வேளையில் கடன் மறுசீரமைப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. முக்கியமாக, அரசாங்கம் திட்ட இலக்குகளுக்கு உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மை இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பின்னடைவு அபாயங்களை ஏற்படுத்துவதாக IMF தெரிவித்துள்ளது.

இவை நடைமுறைக்கு வந்தால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்து, IMF ஆதரவு திட்டத்தின் வழிமுறைகளுக்கு உட்பட்டு கொள்கை பதில்களை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பார்கள் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது..

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி