நிறைய வேளைப்பழுக்களுக்கு மத்தியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று எம் முன் வந்துள்ளது அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெறும் என்று கட்சியின் நிர்மான கர்த்தாவும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச கூறியுள்ளார்.

பத்தரமுல்லயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான காரியாலயத்தில் கூடிய கட்சி உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில் இம்முறை எமது கட்சி 130 அல்லது 120 பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் சட்டங்களுக்கு அமைவாகவும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன களத்தில்

ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தாமரை மொட்டு சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடந்த 3 ம்திகதி உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தேர்தல் விதிமுறைகளுக்கமைய தேர்தல் அறிவிக்கப்பட்டு 7 தினங்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிடும் என கட்சியின்  பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி