கேரளாவில் கலப்புத் திருமணம் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோர் கொலை செய்யப்படுவது, மிரட்டப்படுவது உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காணப்படும் நிலையில், கேரள அரசு இத்தகைய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதுதொடா்பாக கேரளாவின் சமூக நீதித்துறை அமைச்சா் கே.கே. ஷைலஜா கூறியதாவது: "கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது."

"கலப்புத் திருமணம் செய்யும் தம்பதி பொதுப் பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுயவேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக அவா்களுக்கு ரூ.30,000-ஐ ஏற்கெனவே சமூகநீதித் துறை வழங்கி வருகிறது. தம்பதியில் ஒருவா் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவா்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி