ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இன்று (25) மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 28, 2025 அன்று காலை 10:00 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதனால் அவர்கள், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவின் முன் ஆஜராக வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு ஏற்கெனவே அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலித்த பின்னர், திகதி மாற்றப்பட்ட நிலையில், 28ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.