ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஏற்கனவே நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் இடங்களுக்குச் சென்றுள்ளார்.
இதேவேளை, வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேற்றிரவு தன்சல் (உணவு தானம்) வழங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ தலதா வழிபாடு இன்று (25) எட்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கண்டிக்கு ஏற்கனவே சுமார் 400,000 யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளதால், இன்று கண்டிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.