1200 x 80 DMirror

 
 

சோமாலியா நாட்டில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரில் கால்பந்து வீரர்களுடன் சென்று கொண்டு இருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 25 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜா படத்தில் 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடலை ஒரு சிறுமி அழகாகப் பாடும் வீடியோயை இசைப்புயல் ஏ .ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் படப்பிடிப்பு முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பிரபல சிங்கள நடிகை ஹயசிந்த் விஜேரத்ன, லிந்துலை பகுதியில் வைத்து அவர் பயணித்த வேன் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.

இந்த நாட்களில் பேசப்படும் சிறுமி துஷ்பிரயோக சம்பவத்தில் ரிஷாத் பதிதீனின் குடும்பம் சிக்கியுள்ளது. ஆனால் விசாரணை முடிவடையவில்லை.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விடயத்தில், மீன்பிடி சமூகத்தினரிடையே மோதல்களை அரசாங்கம் உருவாக்குவதாக  நாட்டின் முன்னணி மீனவர் சங்கத் தலைவர்களில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதனூடாகவே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவை ஏற்பட்டால் கட்சி தாவுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன திரவங்களும் எரிபொருளும் கடல் நீரில் கலந்துள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு அரசு பதவிகளை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி எடுத்த முடிவு இப்போது சிலரால் மீளப் பெறப்படுகிறது. தோல்வியுற்றவர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கு வரும் விமானங்கள் மூலம் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டுள்ளது.அதன்படி, சம்பந்தப்பட்ட தடுப்பூசி பெற்று 14 நாட்கள் கடந்து விட்டால் விமான நிறுவனங்கள் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை எந்த தடையும் இல்லாமல் ஏற்றிவர அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வருகிறது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (30) பிற்பகல் 12.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்ட, டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியான ஜூட்குமார் ஹிசாலியின் சடலம், அடையாளம் காணப்பட்டது.

2000 ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்களை எல்லையிட்டு விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

சாலையோரம் நடந்துசென்ற நீதிபதி மீது ஆட்டோ ஒன்று மோதியதுடன் நிற்காமல் சென்றது சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

logo

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி