ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சகல மாவட்ட செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா தெரிவித்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் இரண்டு இலட்சத்து 71 ஆயிரத்து 789 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்காளர்களுக்கான வாக்களிப்புக்கான மத்திய நிலையம் தொடர்பில் நாளைய கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

70 அரசியல் கட்சிகள் உள்ள போதும், 64 கட்சிகளுக்கே தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் உள்ளது. 6 கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பில் பிரச்சினை நிலவுகிறது. அக் கட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாதென ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி