அறிமுகம் மற்றும் பொது விதிகள்
tamilleader.lk இணையத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தாரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் tamilleader.lk உறுதிபூண்டுள்ளது.
எங்கள் வலைத்தளங்களில் மூன்றாம் தரப்பினருக்கு சொந்தமான மற்றும் நிர்வகிக்கப்படும் வலைத்தளங்களுக்கான இணைப்புகள் உள்ளன. ஆனால், அத்தகைய வெளிப்புற வலைத்தளங்களின் உள்ளடக்கத்துக்கு, Tamilleader.lk எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது. மேலும், நீங்கள் அத்தகைய வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், அதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
வாசகர்களைப் பற்றி Tamilleader.lk என்ன தகவல்களைச் சேகரிக்கிறது?
நீங்கள் ஒரு சேவையைப் பெற முயற்சிக்கும்போது, அல்லது உங்கள் கருத்துக்களை எழுதும்போது, அல்லது எங்கள் சமூகத்தின் மூலம் தகவல்களை வழங்கும் போது, Tamilleader.lk இணையத்தளம் வழங்கும் ஊடாடலில் சேரும்போது, உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது அலைபேசி எண் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்கப்படலாம்.
வாசகர்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களை Tamilleader.lk எவ்வாறு பயன்படுத்துகிறது?
உங்கள் தனிப்பட்ட தகவல்கள், Tamilleader.lkஆல் "சேவை நிர்வாக தேவைகள்" உட்பட சில சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. "சேவை நிர்வாகத் தேவைகள்" என்றால், Tamilleader.lkக்கு நீங்கள் சந்தா செலுத்திய சேவை தொடர்பாக, உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நீதிமன்றத்தால் உத்தரவிடப்படும் அல்லது அனுமதி வழங்கப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர, உங்கள் தனிப்பட்ட விவரங்களை நாங்கள் இரகசியமாக வைத்திருப்போம். நீங்கள் Tamilleader.lk இணையத்தளத்தில் அவமதிக்கும், ஆட்சேபனைக்குரிய அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களை இடுகையிட்டாலோ அல்லது Tamilleader.lkஇணையதளத்தில் ஏதேனும் இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டாலோ, அத்தகைய நடத்தையை நிறுத்துவதற்கு, Tamilleader.lk உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தலாம்.
Tamilleader.lk, எனது தனிப்பட்ட விவரங்களை எவ்வளவு காலம் வைத்திருக்கும்?
தொடர்புடைய சேவையை வழங்குவதற்கு தேவையான வரை மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எங்கள் தரவுத்தளங்களில் வைக்கப்படும். நீங்கள் ஏதேனும் கட்டுரை அல்லது காணொளி/ஒளி/புகைப்படத்தை Tamilleader.lk இணையத்தளத்துக்கு அனுப்பினால், உங்களின் படைப்பு தேவையான நேரத்துக்கு மட்டும் இணையதளத்தில் வைக்கப்படும்.