1200 x 80 DMirror

 
 

தலைப்புச் செய்தி

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில்  ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர்  மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில்  தாக்குதலை  மேற்கொண்டு    சித்திரவதை புரிந்த நிலையில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வல்வெட்டித்துறை மாநகரசபையால் நகரிலுள்ள பொது பூங்காவை ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் மூன்று பெயர்கள் உண்ட. வழக்கமான பெயர், ஒரு தனி இசை, செல்லப்பெயரை ஒத்த ஒரு சிறு ஒலி.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு சுமார் 10 எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக அதிகாரிகள் கூறினாலும், சமீபத்திய இரு வாரங்களுக்குள் 6 சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன இதை இலேசாக விட்டுவிட முடியாதெனவும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பு கூற யாருமில்லை எனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களின் உரிமையை தடுக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டுமென தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.

காவல்துறை மா அதிபருக்குத் தெரிந்திருந்த நிலையிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67வது பிறந்தநாள் இன்று வடக்கிலும் தெற்கிலும் கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்தில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வர உள்ளது.தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான  "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி