முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொழும்பு
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டத்தை ஏற்பாடு செய்த நபர்களை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவித்தார்.
விக்ரமசிங்கவின் வழக்கு விசாரிக்கப்பட்டபோது நடந்த போராட்டம், நீதிமன்ற அவமதிப்பு சம்பவமாக கருதப்படுவதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், அதன் ஏற்பாட்டாளர்களை அடையாளம் காண புகைப்பட ஆதாரங்களை தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கிடைக்கக்கூடிய புகைப்படங்கள் மூலம் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காண தங்களுக்கு சிறிது நேரம் தேவை என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
இந்த சம்பவம் நீதிமன்றத்தை ரணிலுக்கு பிணை வழங்க அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஒரு அவமதிப்புச் செயலாகும் என்று நீதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்த நிலையில், விசாரணைகள் முடிந்ததும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.