தலைப்புச் செய்தி

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கைக்கு ஏற்றவாறு அதன் யாப்பை துரிதமாக திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

இன்று (20) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற சபையில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராய, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை(21) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி