1200 x 80 DMirror

 
 

தலைப்புச் செய்தி

யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் மூலம் நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்க தவறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

திருகோணமலை, கிண்ணியா குருஞ்சாகேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென கூறும் அரசாங்கம் தமது இருப்பை தக்கவைக்கவும், வாக்கு வங்கியை பாதுகாக்கவும் பாதுகாப்புப்படைகளை பலப்படுத்துகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து தற்போது வரையில் பாதுகாப்புக்கு மாத்திரம் 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (charles nirmalanathan), பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை எனவும் கூறினார்.

சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் மீது பாலியல் புகார் கூறிய அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் மூன்று வாரங்களுக்குப் பிறகு காணொளி அழைப்பில் பேசியிருக்கிறார்.

மாவீரர் கல்லறைகள் உன்னதமானவை, அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள் என்று தெரிவித்த தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன், மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலுள்ள துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

களுத்துறை – கல்பாத்த பிரதேசத்தில், மதுபோதையில் பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்து உயிரிழந்த இளைஞன் விதுசனின் உடலில் 31காயங்கள் இருந்ததாக இன்றைய நாள் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற பேச்சுக்களின் போது புதிதாக நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி