தலைப்புச் செய்தி

இன்று(28), 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் சபையை கலைத்துவிட்டு, அதற்காக மூவரடங்கிய இடைக்கால குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் யாட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை தாண்டி ஓடியதால் பழைய கட்டடங்களுக்கு கடுமையான சேதம் ​ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி