1200 x 80 DMirror

 
 

தலைப்புச் செய்தி

கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 12 பேரைக் காணவில்லை என்று தெரிய வருகிறது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கடல் வழியான படகு போராட்டமானது சற்றுமுன்னர் ஆரம்பாகியுள்ளது.இந்த மீனவர்களின் போராட்டமானது இன்று 17.10.2021 முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என்று, போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வெளியே, நேற்று (அக்டோபர் 16, சனிக்கிழமை) இந்த போராட்டம் நடந்தது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

"வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நாளையும்,மறுதினமும் நடைபெறவுள்ள இரண்டு கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2021 உலகளாவிய பட்டினி குறியீடு (GHI), உலகெங்கிலுமான ஏழை மற்றும் உழைக்கும் மக்களிடையே அதிகரித்து வரும் பட்டினி அளவை எடுத்துக்காட்டியது.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும். அதன் மூலம் இனவாதம், பிரதேசவாத, குழுவாத, பிரச்சினைகள் தொடர்ந்தும் உருவாகி வருகிறது என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

சரிந்து வரும் உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பராமரிப்பது அவசியம் என அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொவிட் நிலைமைக்கு மத்தியில், எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி