ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக அளிக்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் செம்மணி மனிதப் புதை குழியில் கண்டறியப்படும்
எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், "செம்மணி சித்துப்பாத்தி மயான மனிதப் புதை குழிகள் இன்று சகல மட்டங்களிலும் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. இதுவரை 40 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதில் 34 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் இதற்குள் அடங்கும். சிறுவர்களின் புத்தகப்பை, பொம்மை, காப்புகள் என்பவனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற கட்டுக்காவல் மூலம் சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழக தடவியல் மருத்துவத்துறையின் மானிடவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை, விளையாட்டு பொம்மை, காப்புகள் போன்ற சான்றுப் பொருட்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
செய்மதிப் படங்கள் மூலம் மேலும் பல புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரசாங்கம் நிர்ப்பந்தம் காரணமாக புதைகுழி அகழ்வுக்கு அனுமதியயளித்துள்ளது. நீதிமன்ற கட்டளைக்கு புறம்பாக ஐ.நா மனித உரிமைளாளர் ஆணையாளர் புதைகுழிகளை பார்வையிட்டமையும் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தங்களை கொடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமையாளரின் பிரசன்னம் விவகாரத்திற்கு சர்வதேச பரிணாமத்தை வழங்கியுள்ளது. அரசாங்கம் ஆணையாளரின் செம்மணியில் பிரசன்னத்தை விரும்பியிருக்கவில்லை. அதற்கான அனுமதியையும் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கவில்லை.
இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பு சட்டத்தரணிகளே அதனைப் பெற்றுக் கொடுத்தனர். மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம் இல்லாமல் வெறுமனே நீதிமன்ற நடவடிக்கையாயின் அரசாங்கம் விவகாரத்தை எங்காவது மூடி மறைக்கப் பார்த்திருக்கும் அல்லது கிடப்பில் போட்டிருக்கும். சர்வதேசப் பரிணாமம் உள்ளதால் இதனை மூடி மறைக்கவோ, கிடப்பில் போடவோ முடியாது.
மனிதப் புதை குழிகளை அரசாங்கம் தானாகவே முயற்சி எடுத்து தேடிக் கண்டுபிடிக்கவில்லை. தற்செயல் நிகழ்ச்சிகளாகவே அவை கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய செம்மணி புதைகுழி தகனமேடை அமைப்பதற்காக தோண்டிய போது கண்டுபிடிக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வர புதை குழிகளும் தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டன.
தீவுப்பகுதி உட்பட வேறும் பல பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் இருக்கின்றன அங்கும் அகழ்வு முயற்சிகள் இடம்பெறல் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீPதரன் கோரிக்கை விடுத்த போதும் நீதி அமைச்சர் அதனை தட்டிக் கழித்தார்.; இப்புதைகுழிகள் இராணுவத்தினருடையதாக இருக்கலாம், விடுதலை இயக்கங்களின் உட்கொலை சார்பானதாக இருக்கலாம் என திசை திருப்பல் கதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தினால் தென்னிலங்கை அரசியல் களம் சற்று ஆடிப் போயுள்ளது என கூறலாம். இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய சான்றுகளாக இவை இருக்கின்றன என்பதுதான் தென்னிலங்கையின் பதட்டத்திற்கு காரணமாகும். இந்த கொலைகள் சிறீPலங்கா அரசாங்கத்தின் தீர்மானமல்ல.
இராணுவத்தினர்
சிறீலங்கா அரசின் தீர்மானமேயாகும் இராணுவத்தினர் இங்கு வெறும் கருவிகள் மட்டும் தான். இன அழிப்பு நோக்கத்தின் ஒரு பகுதியே இக்கொலைகளாகும். கிருசாந்தி என்கின்ற உயர்தர வகுப்பு மாணவியின் கொலை தான் செம்மணி புதைகுழிகளை முதன்முதலில் அடையாளப்படுத்தியது. 1996 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 7ம்; திகதி கிருசாந்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற தாயார், சகோதரன,; குடும்ப நண்பர்; என்போரும் கொலை செய்யப்பட்டனர். நான்கு உடல்களும் செம்மணியின் ஆழமற்ற புதைகுழியில் புதைக்கப்பட்டன.
இந்தக் கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை உருவாக்கியமையினால் பல படையினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இக்கொலையின் முக்கிய சூத்திரதாரி சோமரத்னராஜபக்ச உட்பட பலர் தண்டனை பெற்றனர். விசாரணையின் முடிவில் இன்னும் பல புதைகுழிகள் செம்மணியில் இருப்பதாக சோமரத்னராஜபக்ச கூறினார் பலர் குற்றங்களைச் செய்த போதும் சிலர் மட்டும் தண்டனையைப் பெற்றதனாலேயே அவர் இவ்வாறு கூறினார.; அதற்காக அவரது குடும்பம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. புதைகுழிகள்; இருக்கும் 10 இடங்களை அடையாளம் காட்ட முடியும் என அவர் கூறியிருந்தார்.
1999ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்கியபோது கொலைகளைச் செய்த பல இராணுவ அதிகாரிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். 1999 ஜூன் மாதம் 16ம், 17ம் திகதிகளில் சோமரத்னராஜபக்ச அடையாளம் காட்டிய இடங்களை அகழ்ந்த போது 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சில எலும்புக்; கூடுகளில் கண்களும் கட்டப்பட்டிருந்தன.
இரண்டு உடல்கள் தடவியல் பகுப்பாய்வு மூலம் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் போன இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. இலங்கை ஆய்வாளர் ஒருவர் 10 எலும்புக் கூடுகள் தாக்குதல் அல்லது கொலைக்கான அறிகுறிகளை காட்டியதாக தெரிவித்தார். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேறு புதைகுழிகள் இல்லை என நிபுணர்கள் ஒருமனதாக முடிவு செய்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்தனர்.
சோமரத்னராஜபக்சவின் நூற்றுக்கணக்கான உடல்கள்; பற்றிய கூற்றை மறுத்து அரசாங்கம் விசாரணையை முடித்து வைத்தது. சில இராணுவ வீரர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 7 இராணுவ வீரர்களுக்கு கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. பின்னர் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
போர் தொடர்ந்ததினால் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சிந்து பாத்தி மயான புதை குழிகள் சோமரத்னராஜபக்ச காட்டிய புதைகுழிகளிலிருந்து தொலைவில் இருந்தன. இவற்றைப் பார்க்கும்போது செம்மணிப் பிரதேசம் ஒரு கூட்டுப் புதைகுழி மையமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. லண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இவை சம்பந்தமான தகவல்களை விவரமாக வெளியிட்டுள்ளது புதிய புதைகுழி 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னர் கூறியது போல தகனமேடை அமைப்பதற்காக தற்காலிகமாக தோண்டிய போது கண்டுபிடிக்கப்பட்டது. 2025 யூனில் குறித்த கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுப்பணிகள் தொடர்கின்றன.
நீதிமன்றத்தினால் அதிகாரபூர்வ மனித புதைகுழி என அறிவிக்கப்பட்டள்ளது. தற்போது சோமரத்னராஜபக்சவினை மீண்டும் அழைத்து அவர் கூறிய இடங்களில் அகழ்வு இடம்பெற வேண்டும் என்றும், புதிய வழக்குடன் முனனைய வழக்கையும் இணைக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் பல தடங்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம்.
குறிப்பாக முழுமையான அகழ்வுகளை மேற்கொள்ள நிதி வசதி இல்லை என கைவிரிக்கலாம். பல்வேறு அழுத்தங்களை நிபுணர்களுக்கு கொடுத்து புதைகுழிகள் இனி இல்லை என அறிவித்தலை விடுக்கலாம். சோமரத்னராஜபக்ச காட்டிய புதைகுழி விவகாரத்தில் இந்தக் கைவிரிப்பு இடம்பெற்றுள்ளது.
முழுமையான தடய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பரிசோதனைக் கருவிகள் இல்லை எனக் காரணம் கூறலாம். ஏற்கனவே அமைச்சர் சந்திரசேகர் பரிசோதனைக் கருவிகள்; தங்களிடம் இல்லை அதனைப் பெற்றுத் தருமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்தல் என்ற பெயரில் காலத்தைக் கடத்த முயற்சிக்கலாம்.
இங்கு அனைத்து எலும்புக்கூடுகளும் வெளிநாடுகளுக்கு அனுப்பப் போவதில்லை. தவிர வெளிநாடுகளுக்கு நிதி இல்லை எனவும் கூறப்படலாம். எலும்புக்கூடுகளை பாதுகாப்பதில் கவனக்குறைவு, துஸ்பிரயோகம் என்பனவும் உருவாகலாம. திசைவழி திருப்பங்களும் இடம்பெறலாம். இங்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனின் கருத்துக்களையும் கவனத்தில் எடுப்பது அவசியம் .அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தின் ஊடாக அளிக்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் செம்மணி மனிதப் புதை குழியில் கண்டறியப்படும் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும,; மனிதப் புதைகுழி அகழ்து எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்படுவது தொடக்கம் அவை ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது வரையான ஒட்டுமொத்த செயன்முறையும் எந்தெந்தத் தரப்பினரால் கையாளப்படுகின்றது என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், மீட்கப்படும் எலும்புக் கூடுகளை சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்குமாறு அரசாங்கத்திடம் சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும், ஆதாரங்களைத் திரட்டல், பகுப்பாய்வு செய்தல் என்பன சுயாதீன தடவியல் குழுவால் அல்லது சர்வதேச நிபுணர்கள் குழுவால் கையாளப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.
மேலும் இது விடயத்தில் குற்றத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யக்கூடிய வகையில் சர்வதேச விசாரணைச் செயன்முறை ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். இந்த விவகாரம் தமிழ் மக்களின் பொதுப் பிரச்சனை இதனால் தமிழ் மக்களின் பங்களிப்பு இதனை முன் கொண்டு செல்வதில் மிகவும் அவசியமானதாகும். மற்றவர்கள் அனைத்தையும் செய்வார்கள் என கூறிவிட்டு நாம் வாழ விருக்க முடியாது . தமிழ் மக்களின் கூட்டு முயற்சியும் , தொடர் செயற்பாடும் இங்கு தேவை.
தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில் நிறுவனங்களும் பலவீனமாக இருக்கின்ற சூழலில் இங்கு பல சவால்கள் எழலாம். குறிப்பாக தொடர் செயல்பாடுகளைப் பொறுத்தவரை தமிழ்த் தரப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. அதற்கான வலுவான நிறுவனங்கள் இல்லாமையே இதற்கு காரணமாகும். தமிழ்த் தரப்பைப்; பொறுத்தவரை இந்த விவகாரத்தில் பல பணிகள் காத்திருக்கின்றன.
போராட்ட களம்
அதில் முதன்மையானது சட்டம் தொடர்பான பணிகளாகும். சட்ட நிறுவனங்களக்கூடாகவே இதனை முன் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. ஒரு சில சட்டத்தரணிகளே இப்பணிகளில் முன்னிலை வகிக்கின்றனர் இது போதுமானதல்ல. சட்டத்தரணிகள் குழாம் ஒன்று இதற்காக உருவாக்கப்படல் வேண்டும். கொழும்பு சட்டத்தரணிகளே தற்போது களத்தில் பணியாற்றுகின்றனர். தொடர்பணிகளைச் செய்வது அவர்களுக்கு சிரமமானது. யாழ் மாவட்ட சட்டத்தரணிகளையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
சட்டத்தரணி ஜெயரூபன் தலைமையிலான யாழ் சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு தயாராக இருப்பதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜெயரூபன் அறிவித்துள்ளார். சட்டத்தரணிகள் இலவசமாக பணியாற்ற முன் வந்தாலும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு நிதி தேவை. அதற்கு வழிவகைகளைக் காணுதல் வேண்டும். இதற்கென ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் அதற்கான நிதியைச் சேகரிக்கலாம். சட்டச் செயற்பாடுகளுக்கென என யாழ்ப்பாணத்தில் ஒரு சட்ட அலுவலகம் திறக்கப்படுவதும் அவசியமானதாகும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம். அரியாலையைச் சேர்ந்த பலர் அக்காலத்தில் காணாமல் போயிருந்தனர் எனச் செய்திகள்; வருகின்றன. அங்கே களஆய்வு ஒன்றை மேற்கொள்வது நல்லது. பல்கலைக்கழக மாணவர்களை இதில் ஈடுபடுத்தலாம். குறிப்பாக தொல்லியல் துறையைச்; சேர்ந்த மாணவர்களை இணைத்துக் கொள்ளலாம் மாணவர்களுக்கு இது ஒரு களப் பயிற்சியாகவும் இருக்கும் இரண்டாவது சர்வதேச மயப்படுத்தல் பணிகளாகும.; சர்வதேச அழுத்தங்கள் இல்லாமல் இந்த விவகாரத்தை ஒருபோதும் முன்கொண்டு செல்ல முடியாது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் விவகாரத்தை கிடப்பில் போடுவதை தவிர்ப்பதற்கு சர்வதேச அழுத்தமே ஒரே வழியாகும். இந்த விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் தரப்பினர், கிறிஸ்தவ மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இதில் பங்களிப்பைச் செய்யலாம்.
இதில் முதன்மை பங்கு புலம்பெயர் தரப்பினருக்கு உரியதாகும். சர்வதேச தொடர்புகளை அதிகம் கொண்டிருப்பவர்கள் இவர்களேயாவர். அடுத்ததாக கிறிஸ்தவ மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிடலாம். கிறிஸ்தவ மத நிறுவனங்கள் சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டவை. அவர்கள் இப்பணிகளைச் செய்வதில் பெரிய சிரமம் இருக்கப்போவதில்லை. முன்னரும் அவர்கள் நிறையப் பணிகளை செய்திருக்கின்றார்கள்.
கத்தோலிக்க மCCZMGGதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதில் நிறையப் பங்கு உண்டு. முள்ளிவாய்க்கால் படுகொலையை சர்வதேச மயப்படுத்துவதில் ஆயர் இராயப்பு யோசேப்புவின் பங்கினை குறைத்து மதிப்பிட முடியாது. விடுதலைப் போராட்டத்திலும் கத்தோலிக்க மத குருமார்களது பங்கு அளப்பரியது. பல கத்தோலிக்க மதகுருமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் போன்ற பங்களிப்பை ஏனைய மதத் தலைவர்கள் ஆற்றினார்கள் எனக் கூற முடியாது. அடுத்தது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இதில் பங்களிப்புச் செய்யலாம. குறிப்பாக சர்வதேச மனித உரிமை நிறுவனங்களை இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அக்கறை செய்ய வைப்பது இவர்களின் கடமையாகும் .
மூன்றாவது ஊடகப் பணியாகும். தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஊடகவியலாளர்கள் இதில் பங்களிப்புச் செய்யலாம். தகவல்களை ஒழுங்காகத் தொகுத்து முன்வைக்க வேண்டியது இவர்களின் பணியாகும். தாயக மக்களையும் சர்வதேச சமூத்தையும் விழிப்பாக வைத்திருப்பதற்கு ஊடகப் பணி அசியமானதாக உள்ளது. வலைத்தளங்களிலும் பதிவிடுவோர் மிக அவதானமாக தமது கடமைகளை செய்வது நல்லது. உள்ளதை உள்ளவாறு பதிய வேண்டுமே தவிர அவற்றை மிகைப்படுத்தக்கூடாது. தகவல்கள் தொடர்பாக நம்பகத்தன்மை மிகவும் அவசியம்.
நான்காவது கருத்துருவாக்கிகள், ஆய்வாளர்களது பணிகளாகும். சர்வதேச ரீதியாக இது தொடர்பான அனுபவங்களை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தலாம், யூதர்களிடமும் பொஸ்னியர்களிடமும் இது தொடர்பாக நிறைய அனுபவங்கள் உள்ளன. ஐந்தாவது அரசியல் களங்களை பயன்படுத்தும் பணியாகும். அரசியல்வாதிகளுக்கு இந்த விவகாரத்தில் பல பணிகள் உண்டு.
நாடாளுமன்றத்தில் இதனை எப்போதும் கேள்விக்குட்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தை போராட்ட களமாக்குவதற்கும் தயங்கக் கூடாது. உள்;ராட்சிச் சபைகளும் இதில் பங்களிப்பை வழங்கலாம் மொத்தத்தில் பல பணிகள் தமிழ்த் தரப்பிற்கு காத்திருக்கின்றன. செம்மணிப் மனித புதைகுழி தமிழ்த்; தரப்பிற்கு வரலாறு தந்த மிகப்பெரிய வாய்ப்பு. வரலாறு எப்போதும் சந்தர்ப்பங்களைத் தருவதில்லை. அது தரும்போது அதனைப் பற்றிப் பிடித்து முன்னெடுக்க தமிழ்த் தரப்பு தயாராக இருக்க வேண்டும். வரலாறு தந்த இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் தமிழ் தரப்பை மன்னிக்காது என குறிப்பிட்டுள்ளார்.