விமான ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால், அப்பகுதிகளில்
பட்டம் விடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குரங்கொட, சீனா விரிகுடா, பலாலி, கட்டுக்குருந்த, கொக்கலை, வவுனியா, வீரவில மற்றும் மத்தல போன்ற பிரதேசங்களில் உள்ள விமான ஓடுதளங்களுக்கு அருகில் இவ்வாறு பட்டம் விடுப்பதைத் தவிர்க்குமாறு விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
பட்டம் விடுவதால் ஏற்படக்கூடிய விமான விபத்துக்கள் குறித்து விமானப்படை நேற்று [28ஆம் திகதி] எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோன்று, உலகெங்கிலும் நிகழும் விமான விபத்துக்களுக்கு விமான ஓடுதளங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதும் ஒரு முக்கிய காரணம் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது.