"முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வருவதால், பிணை வழங்குவதற்கு சிறப்புக்
காரணங்கள் தேவை” நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் தெரிவித்தார்.
"இந்தக் கட்டத்தில், இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கான அத்தகைய சிறப்புக் காரணங்கள் எதுவும் இல்லை. குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வருகின்றன, இதற்கு பிணை வழங்க சிறப்புக் காரணங்கள் தேவை. இந்த வழக்கை சாதாரண குற்றவியல் வழக்காகக் கருதாமல், தீவிரமான குற்றவியல் குற்றச்சாட்டுகளைக் கொண்ட வழக்காகக் கருதுமாறு தங்கள் கௌரவத்தை நான் கோருகிறேன்.
“சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்த வழியில் அரச நிதியைச் செலவிடுவது நியாயப்படுத்த முடியாதது. இது பொது நிதியைத் தெளிவான முறையில் தவறாகப் பயன்படுத்துவதாகும். ஒரு தனிப்பட்ட வருகை உண்மையில் அதிகாரபூர்வமான விஜயம் என்று கூறி, பின்னர் எப்படி இவ்வாறு பணத்தை எடுக்க முடியும்?
“சந்தேக நபரே தனது வாக்குமூலத்தில் இது ஒரு அதிகாரபூர்வமான வருகை அல்ல, ஒரு தனிப்பட்ட விஜயம் என்று கூறியுள்ளார். விசாரணை இன்னும் முடியவில்லை. மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட வேண்டியுள்ளனர். நீதித் தேவி கண்ணை மூடிக்கொண்டிருக்க வேண்டும், தாங்கள் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே முடிவை எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்" என்று பீரிஸ் கூறினார்.