கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் கைதியாகக் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியின் விசேட கவனிப்பு பிரிவில்
நோயாளியாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இந்த வழக்கின் போக்கு எப்படி அமையும் என்பதை இன்றைய தவணையின் போது இடம்பெறக்கூடிய சட்ட முடிவுகள் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்திற்கு முன்னிலையாக முடியாத நிலையில் வைத்தியசாலையில் இருப்பாரெனின், நீதவான் நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று, அவரைப் பார்த்து,உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும். இதுதான் வழமையான சட்ட ஏற்பாடு. அது இன்று அது நடக்குமா என்று தெரியவில்லை.
இந்த வழக்கின் இன்றைய தவணையையொட்டி மக்களின் செல்வாக்கை - ரணிலுக்கான ஆதரவை - அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்களின்
எதிர்ப்பை - காட்டுவதற்காக பெருமக்கள் கூட்டத்தை இன்று தலைநகரில் எதிரணிகள் கூட்டவிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. அவற்றுக்கு மத்தியில் ரணில் நீதிமன்றுக்கு கொண்டுவரப்படுவாரா அல்லது நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று அவரை பார்வையிட்டு உத்தரவுகளை வழங்குவாரா என்பது இன்று நாள் கட்டவிழும்போதுதான் தெரிய வரும்.