முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி
மொஹமட் நஷீட், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
X சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட பதிவில், "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.