சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா?
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.