ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 20, 25 பேர் கொண்ட இராணுவ உப குழுவை நிர்வகிக்க முடியும் என்றாலும் கிராம சேவகர் பிரிவை கூட அவரால் நிர்வகிக்க முடியாது என தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள செனரத் திஸாநாயக்க, அரசியல் ஈடுபடுவது எப்படியாக இருந்தாலும் யுத்தம் செய்தது இராணுவ தளபதியே அன்றி இராணுவ கேர்ணல் ஒருவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

அந்த முகநூல் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவு பற்றியது. இந்த தெரிவு சமூகத்தில் பேசப்படும் பொருளாகியுள்ளது. இவர்களை தெரிவு செய்ய நாட்டின் ஜனாதிபதி புத்திஜீவியாகவோ படித்தவராகவோ இருக்க வேண்டும். கேர்ணல் ஒருவரிடம் தேவையற்றவைகளை எதிர்பார்க்க வேண்டாம்.

அவரால் 20 முதல் 25 பேர் கொண்ட இராணுவ உப குழுவை நிர்வகிக்க முடியுமே அன்றி, கிராம சேவகர் பிரிவை நிர்வகிக்க முடியாது.

அரசியல் எப்படி இருந்தாலும் யுத்தம் செய்தவர், இராணுவ தளபதியே அன்றி கேர்ணல் அல்ல.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் உதவியாளர் பதவியை வகித்த பிரதமரிடமும் இப்படியான ஒன்றை எதிர்பார்க்க முடியாது.

இவற்றை அவதூறு என தவறாக எண்ண வேண்டாம். இவர்கள் தலைமையில் நடந்த நூற்றுக்கணக்கான கூட்டங்கள் மற்றும் வைபவங்களில் கலந்துக்கொண்ட அதிகாரி மற்றும் நிறுவன தலைவர் என்ற வகையிலும் அவர்கள் எடுத்த தீர்மானங்கள் குறித்த அனுபவம் கொண்டவன் என்ற முறையிலும் நான் இவற்றை கூறுகிறேன் என செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தில் கேர்ணல் தர அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி