பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை! ஜி.எல். பீரிஸ்
எனக்கும் அமைச்சின் செயலருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
எனக்கும் அமைச்சின் செயலருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையென என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியர்கள் மூவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸாா் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.
மோசமான காலை நிலை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களின் 78 பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (09) நடைபெற்ற ஊடச சந்திப்பின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க கூறுகிறார்.
காடுகளின் கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும் அழைக்கப்படுகிறார்.
இன்று ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அறிவுஜீவிகள் பற்றிய ஒரு கதை கண்ணில் பட்டது.அறிவுஜீவிகள் புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவதை விட்டுவிட்டு சாமானியர்கள் என்று சொல்லப்படுபவர்களுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது நண்பரின் எண்ணம். அவர்கள் தங்கள் மொழியைப் பேசவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்ற வலுவான உணர்வு அவருக்கு இருந்தது. அதை அவர் பூமியின் அரசியல் என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இயற்கை உரக் கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் போராட்ட இயக்கத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி உள்ளிட்ட மாணவர்- மக்கள் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாகப் பார்ப்பது மிகவும் தவறானது என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுள்ள அரச ஊழியர்களின் அக்ரஹார காப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக ஓய்வூதியத்திலிருந்து மாதாந்த பங்களிப்பை பிடித்தம் செய்வதை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எனினும் அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
தனது 17 ஆண்டு நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் பார்த்த மிக மோசமான நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றம் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏன் தற்போது அந்த விசாரணைகளை நடத்துவதில்லை என பிரபல சிங்கள திரைப்பட நடிகை வீனா ஜெயகொடி கேள்வி எழுப்பியுள்ளார்.
'ஒரே நாடு – ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்குவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ராஜபக்ஷ சகோதர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பாலானோர் விவசாயிகளே என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, விவசாயிகளை சகோதர்கள் இப்போது பழி வாங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒரு அத்திவாரம் என்பதனால் அதனை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.