'ஒரே நாடு – ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்குவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தனக்குத் தெரியாமல் இத்தகைய நிறுவனமொன்றை நிறுவியமையால் தொடர்ந்தும் நீதியமைச்சுப் பதவியில் நீடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகக் கூறி நீதியமைச்சர் அலி சப்ரி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். பாராளுமன்றத்தின் ஊடாக நாட்டில் சட்டங்களை தயாரிப்பதற்கு வழிமுறை இருக்கும் போது, இத்தகையதொரு செயலணி நிறுவப்பட்டமையானது அனாவசிய பிரச்சினைகளை உருவாக்குமெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிற்கு பதிலளிக்கும் வகையில், மேற்படி விடயத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். என்றாலும் குறித்த ஆலோசனைகளின்படி சட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளின் போது கட்டாயமாக நீதியமைச்சரின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி