நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் காணப்படுகின்றமை, சர்வதேச கடல் போக்குவரத்து இணையத்தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடலின் மேற்குப் பகுதி நோக்கி இன்று (06) முற்பகல் பயணித்திருந்தது.

கடந்த 24 ஆம் திகதி வேறு பெயரில் ஹம்பாந்தோட்டைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காணப்பட்ட இந்தக் கப்பலை, கடந்த 02ஆம் திகதி தனது உண்மையான பெயரில் மாத்தறை – வெலிகமவிலிருந்து 61 கடல் மைல் தொலைவில் காண முடிந்தது.

அங்கிருந்து மீண்டும் செய்மதியின் தொடர்பை துண்டித்து காணாமற்போன கப்பல், இலங்கை கடற்பரப்பில் எந்தப் பகுதியில் காணப்பட்டது என்ற உறுதியான தகவலை இலங்கையினால் அறிந்துகொள்ள முடியாமற்போனது.

இதற்கிடையில், கப்பல் தொடர்பான தகவல் மீண்டும் நேற்றைய தினம் (05) பதிவாகியது.

நேற்று தெரிய வந்த தகவல்களுக்கு அமைய, இரவு 11 மணியின் பின்னர் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், மேலும் ஆழமான கடற்பரப்பு அல்லது சீனா நோக்கி பயணிப்பதாக தகவல் பதிவானது.

மீண்டும் நள்ளிரவாகும் போது மீண்டும் கப்பல் கொழும்பு துறைமுகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இன்று (06) அதிகாலை 05 மணியாகும்போது கப்பல், கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்தமையை கடல் பயண இணையத்தளம் மூலம் அறியமுடிந்தது.

கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றிப் பயணித்த இந்தக் கப்பலை கொழும்பு துறைமுகம் ஏற்றுக்கொள்ளுமா?

இது குறித்து ஹாபர் மாஸ்டரிடம் வினவியபோது, அந்த கப்பல் ஏதேனும் விநியோகத்தை பெறுவதற்கோ அல்லது கொழும்பு துறைமுகத்திற்கு வருவதாகவோ இதுவரை அறிவிக்கப்படவில்லை என கூறினார்.

இதனிடையே, கப்பல் துறைமுகத்திற்குள் நுழைவதைத் தடுக்குமாறு அனைத்துப் பிரிவினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹாபர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், குறித்த கப்பலிலுள்ள சேதனப் பசளையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித ஜயசிங்க குறிப்பிட்டார்.

இரு சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்ட அந்த சேதனப் பசளையில் பாதகமான பக்டீரியா அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் அதனை ஏற்றுக்கொள்வதை இலங்கை நிராகரித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி