13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒரு அத்திவாரம் என்பதனால் அதனை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில் தமிழரசுக் கட்சியும், இரா.சம்பந்தனும் கலந்துகொள்ளாத நிலையில் அவர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் 13 ஆவது திருத்த சட்டத்தை மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் ஒற்றுமை அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், அந்த ஒற்றுமையை பலப்படுத்த இலங்கை தமிழரசு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி