கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ பதவி விலகினார். அன்று நாம் அடைந்த துயரத்தை விட இன்று அவரை பதவி
விலகச் செய்தவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும் அனைத்து மக்களையும் அந்த துயரத்திலிருந்து மீட்பதற்கான பொறுப்பு எமக்கிருக்கிறது. விரைவில் நாம் அதற்குரிய செயற்பாடுகளி;ல் ஈடுபடுவோம் என்றார்.
கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது நாமல் இதனைத் தெரிவித்தார்