ஆசிரியர் அதிபர் போராட்டம் சம்பந்தமாக அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையை காட்டாத போதிலும் பிற துறைகளில் உழைக்கும மக்களின் ஆதரவை தெரிவிப்பதற்காக நவம்பர் 09ம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சகல தொழிற்சங்களும் இணைந்து கொழும்பில் பிரமாண்டமான எதிர்ப்பை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கூறுகிறது. மாத்திரமல்ல, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள கற்பித்தல் கடமையை மாத்திரம் செய்யும் தொழிற்சசங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் தொழிற் சங்க கூட்டமைப்பு கூறுகிறது. மாணவர்களுக்கு கற்பித்தலைத் தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லையெனவும் கூட்டமைப்பு கூறுகிது.

இதற்கிடையே, ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (05) பகல் 12.00 மணியிலிருந்து 01.00 மணிவரை சகல பல்கலைக்கழக பிரஜைகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கொத்தலாவல சட்டமூலத்தை ரத்து செய்தல், சகல மாணவர்களுக்கும் நிகழ்நிலை கல்வி வசதிகளையும், கருவிகளையும் பெற்றுக் கொடுத்தல், ஆசிரிய-அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குதல், அரச வருமானத்தில் கல்விக்கு 6 வீதம் ஒதுக்குதல் உட்ப பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி