நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை
அடைக்க முடியும் என்றாலும், அவர்களில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைத் திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதோடு 36 சிறைச்சாலைத் திணைக்களத்தில் அதிகபட்சமாக 12,000 கைதிகளை அடைக்க முடியும். தற்போது 33,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, எங்கள் பணி மிகப்பெரியது. மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கானவை.
சிறைச்சாலைகளில் ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகளால் நம்பிக்கை குறைந்திருக்கலாம் இருப்பினும் எமது அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்றார்.