நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் கையளித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய கருத்தை கேட்காமல் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்” என அழைக்கப்படும் கோட்பாட்டிற்காக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து அதன் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதியமைச்சர் ஜனாதிபதியிடம் நேற்று (05) ராஜனாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து விஜயத்தின் பின்னர் இலங்கை திரும்பிய ஜனதாபதியை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி, சட்ட வரைவுகளுக்கான முறையொன்று இருக்கும் போது வேறு முறையில் சட்டங்களைத் தயாரிக்க முயல்வது அனாவசியமான பிரச்சினைகளை உருவாக்குவதாக இருக்குமென சுட்டிக்காட்டியுள்ளார். என்றாலும் அவரது ராஜினாவை ஜனாதிபதி ஏற்கவில்லையென ஊடகங்கள் கூறுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி