பேராசிரியர் கொல்வின் ஆர்.டி சில்வாவின் கருத்துப்படி, தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் நாட்டைக் காப்பாற்றுவது கடினமானது என மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

Nextv  மங்களவின் முன்மொழிவுகள் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நியமனம் தனது பாட அனுபவத்தின் அடிப்படையில் அல்ல என்றும் பல்வேறு சக்திகளால் பலூனை ஊதிப் பெரிதாக்கியதாகவும் விக்டர் ஐவன் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்த விடயத்தில் அனுபவம் வாய்ந்தவர் அல்ல எனவும், இது அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் மக்களின் கவனத்திற்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒரு மனிதனாக அல்லது அவரின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊதிப்பெருப்பிக்கப்படும் ஒரு நபராக மாறிவிட்டார் என்பது தற்போது மக்களுக்கு தெளிவடைந்துள்ளதாக விக்டர் ஐவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த ஆட்சியாளரால் கூட நல்ல மனதுடன் கட்டுப்படுத்த முடியாத குழப்பம் நிலவும் நாட்டில் ஜனாதிபதியால் இந்த சுமையை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இரசாயன உரக் கொள்கை குழப்பமானதாக இருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் பஞ்சம் ஏற்பட்டு கலவரமாக மாறக் கூடும் எனவும் விக்டர் ஐவன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிற்கு ஒரு சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணிக்கு கலகொட அத்தே நியமிக்கப்பட்டமை கேலிக்கூத்தான செயல் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ஈஸ்டர் ஆணைக்குழுவினால் கலகொட மீது குற்றம் சுமத்தப்பட்டமையே இதற்கான காரணம் என விக்டர் ஐவன் விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதியின் புதிய அரசியலமைப்பு திருத்த பிரச்சாரம்  பற்றி விக்டர் ஐவன் இவ்வாறு கூறுகிறார்: இலங்கையின் பிரச்சசினை நெருக்கடியில் மங்கள சமரவீர உயிர்வாழ்ந்த காலங்களில் மேற்கொண்ட விவாதங்களின் அடிப்படையில். உண்மையான தேசபக்தி (#TRUEPATRIOTLK) சித்தாந்தத்தின் மூலம் ஒரு நல்ல நாடு அதன் நோக்கத்தை முன்னேற்றுவதே முதன்மை நோக்கமாக இருந்தது (Radical Center) தீவிர மையம் ஊடாக யோசனையை முன்வைக்க முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, மூத்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான விக்டர் ஐவனின் 'மறுமலர்ச்சி' அமைப்புடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டன.

வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வு அவசியம் - சாணக்யன் ராசமாணிக்கம்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட (Nextv) பாராளுமன்ற உறுப்பினர் சாணக்யன் ராசமாணிக்கம் பேசுகையில், மக்களுக்கு அன்றாட வாழ்வில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் அரசியல் சாசனத்தில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார். எனவே, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது இந்த தருணத்தில் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தருணத்தில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது உண்மையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே அன்றி அரசியல் இலாபங்களுக்காக அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி