ஆட்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மக்களைக் கொன்று காணாமல் ஆக்குவது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக, நாட்டின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பசளையை வழங்க ராஜபக்ச கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக கண்டனப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் முடிவால் அரசாங்கத்தின் கூட்டாளிகள் பீதியடைந்துள்ளனர் இதனால் கூட்டு கட்சிகளின் தலைவர்களை வசப்படுத்தும் பாரிய நடவடிக்கையை அரசாங்கத்தின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஹங்குரன்கெத்த - ரூக்வூட் தோட்டத்தில் வசிக்கும் முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் சிறுவன் சஞ்ஞீவன் பலரையும் வியக்க செய்துள்ளார்.

ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நன்மாறன், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது வயது 72.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் மனதைச் சீண்டிக் கருமங்களை நிறைவேற்ற விரும்புவன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) அழைப்பு விடுத்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட தீவிரவாத பௌத்த துறவி ஒருவரை சக்திவாய்ந்த சட்டமன்ற அமைப்பின் தலைவராக நியமித்தமைக்காக அரசாங்கத்தின் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம் மேற்கொண்டதுடன், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக தெரிவித்து உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாட்டின் இறையாண்மையுடன் விளையாட எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) இல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், வனவளத்  திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (27) நடைபெற்றது.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று கனடாவில் ஆட்சியமைக்கின்றது. இந்த புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி