MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இலக்கம் 6 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று நிராகரித்துள்ளார்.

நந்தசேன ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் பெயரின் ஒரு பகுதியாகும். இருப்பினும், பெயர் குறிப்பிடப்பட்டதும், எதிர்பாராத விதமாக கடுமையான பதிலைக் கண்டதும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ கோபமடைந்தார்.

இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று நாட்களுக்குப் பின்னர் அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமைத் தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதி பலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப்பப் படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு – நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு, தொழில் ஆணையாளர் நாயகம் பொது மக்களைக் கேட்டுள்ளார்.

ஒரு காலத்தில் கீர்த்தி சுரேஷ் என்றால் ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு இருக்கும். அதுவும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்ததால் வந்த ஒரு சில படங்களிலேயே முன்னணி நடிகையாக உயர்த்திவிட்டு அழகு பார்த்தனர்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள போதிலும் வட மாகாணத்தில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கு, கிழக்கில் முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தம் எனவும் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ. பத்மன் சூரசேன மற்றும் சிசிர டீ ஆப்றூ ஆகியோரோல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி, 6 நாட்களாக அரசியல் கைதியொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக அந்நாட்டின் மாமன்னர் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று (ஜனவரி 12) காலை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நாட்டில் அவசரநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தலில் 'அப்பே ஜன பல கட்சிக்கான தேசிய பட்டியலை வென்ற அதுரலியே ரத்தன தேரர் விரைவில் ஆளும் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு முடங்கிப்போயுள்ளது.

குடி போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒரு மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி, பாதையில் சென்று கொண்டிருந்த சிலரையும் விபத்தில் சிக்க வைத்துவிட்டு தப்பிச் சென்ற பிரதமரின் செயலாளரொருவரை பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் பொதுமக்கள் மீது வன்முறை மற்றும் சித்திரவதையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகக் கவலைகள் அதிகரிக்கும் நிலையில் ஸ்காட்லாந்து பொலிசார் இலங்கைப் பொலிசாருக்கு பயிற்சி அளிக்கும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளனர்.லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிசார் பிரிட்டனைச் சேர்ந்த சில தனியார் கூலிப்படைகள் இலங்கையில் செயல்பட்டமைத் தொடர்பில் விசாரித்து வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் `ஈழப் பிரச்சனை` பரவலாகப் பேசப்படும். தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டு அதன் மூலம் வாக்குகளைப் பெறுவதே கட்சிகளின் நோக்கமாக இருந்துள்ளது.இப்போது மீண்டும் மாகாண சபைகளை இல்லாமல் செய்வதற்கு இலங்கையில் மீண்டும் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளும் அவர்களின் கூட்டணியில் இருப்பவர்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பை ஒரே குரலில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி