கொழும்பு - மட்டக்குளி பிரதேசத்தில் பெண் ஒருவரின் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 இலட்சத்து 84 ஆயிரத்து 381 ரூபா பெறுமதியான தங்க நகைகள் , கனடா நாணயத்தாள்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் ஆகிய பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
மட்டக்குளி பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 34 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.