பிள்ளையானை காப்பாற்ற ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த ஒரு தரப்பே ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திட்டமிட்டதாக மீளவும் ஒரு பேசுபொருள்
உருவாகியிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதி வேண்டுமாக இருந்தால் அரசாங்கங்களையே அரசாங்கம் விசாரிக்கவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஆக ஒரு முடிவின் அடிப்படையில் அரச நிகழ்ச்சிநிரல் பயணிக்கிறதாக இருந்தாலும் முழுமையாக கடந்தகால அரசுகளை விசாரிக்கமுயலுவது ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கி அழைத்து செல்லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி நிற்கிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளராக நாமலை அறிவித்திருப்பதும் இந்த விடயங்களை பேசி ராஜபக்சக்களை பேசுபொருளாக்குவது ஒரு சிக்கலாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சுரேஸ் சாலே ஏன் விசாரிக்கப்படவில்லை இதுதொடர்பில் அறியப்பட்ட சாட்சியமான அசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவருவது சாத்தியமா ? பிள்ளையான் இந்த விவகாரத்தில் பலிக்கடாவா ? அல்லது பிள்ளையான்தான் ஒரு பிரதான சூத்திரதாரியா போன்ற கேள்வுக்கான பதிலாகவும் அதே நேரம் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சிறிலங்கா அரச இயந்திரம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் முழுமையான ஒரு பார்வையோடு வருகிறது இன்றைய அதிர்வு....