முன்பதிவு செய்யப்பட்ட ரயில் சேவைகளை முன்னறிவிப்பின்றி இரத்து செய்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் மீது அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தபால் மற்றும் நகரங்களுக்கிடையிலான விரைவு ரயில்கள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டு, பயணிகளுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்யப்படும் என நான்கு முறை அறிவித்துவிட்டு, பின்னர் முதல்நாள் இரவு ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவிப்பதாக இலங்கை நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் அதிகளவான நீண்ட தூரப் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

”பயணிகளின் நலன் கருதி நீண்ட தூர புகையிரத சேவைகளை தொடர்ந்தும் செயற்படுத்துமாறு எமது சங்கம் அதிகாரிகளுக்கு அறிவித்த நிலையில், ரயில்வே அதிகாரிகளின் கடந்தகால தொழிற்சங்க நடவடிக்கையின் பின்னர், ஜனவரி 2 முதல் அனைத்து நீண்ட தூர சேவைகள் உட்பட வழக்கமான ரயில் அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு உறுதியளித்தனர். எனினும், அந்த நாட்கள் கடந்துவிட்ட போதிலும், ரயில்களின் திகதி மற்றும் அட்டவணையை உடனடியாக வெளியிடுவதையும், அந்த ரயில்களை உடனடியாக இரத்து செய்வதையும் எங்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.”

ஜனவரி 10 திங்கட்கிழமை பதுளை - கொழும்பு இரவு தபால் ரயில், கொழும்பு - ஹட்டன் விரைவு ரயில் மற்றும் கொழும்பு - காங்கேசன்துறை விரைவு ரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது வரையில் பொதிகள் போக்குவரத்து ரயிலை நிர்வாகம் முறையாக இயக்கத் தவறியதன் காரணமாக தேசிய லொத்தர் சபையினால் ரயிலில் கொண்டு செல்லப்படும் லொத்தர் சீட்டுகள் மற்றும் மத்திய மாகாணத்தில் இடம்பெறும் மலர் பொதிகள் சேவை நடவடிக்கைகள் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத் தலைவர் தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார். 

நட்டத்தில் இயங்கி வரும் புகையிரத திணைக்களத்தை மேலும் நட்டத்தில் ஆழ்த்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

“நாடு முடக்க நிலையில் இருந்து நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்த பின்னர்,  பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதோடு பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன, ஆனால் பயணிகளுக்கு போதுமான ரயில்கள் இல்லாததாலும், முன்னறிவிப்பின்றி ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாலும், ஏற்படும் அசௌகரியம் காரணமாக நிலைய அதிபர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டு சில நாட்களாக நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அதிகாரிகளிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் எதிர்வரும் சில தினங்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிக்கையின் ஊடாக எச்சரித்துள்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி