அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டில் எதிர்வரும் 18-01-2022 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் முக்கிய உரை மீதான ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (06) கொழும்பில் தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்கும் முகமாக இந்தியா தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். இல்லை என்றால்  புரட்சி வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் வழங்காது.இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சட்டத்தரணி சுசில் பிரேமஜயந்தவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி நாட்டைக் காக்க ஆட்சிக்கு வந்த தற்போதைய ராஜபக்சே அரசு, தற்போது வீட்டின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை விளைவித்து வருகிறது.

ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்க்க மக்கள் தயாராக இருந்தால், தமது கட்சியும் அதற்கு தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் ஊழலால் விழுங்கப்பட்டு வருகின்றன எனவே நாட்டில் ஊழலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அந்நிய கையிருப்பு குறைந்து வருவதால் நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சமீபத்திய திட்டமாக மேலும் உள்ளூர் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அதிகாரத்துடன் அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த இறுதி ஆவணத்தை முன்னணி தமிழ் அரசியல் கட்சி நிராகரித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி