நாட்டையும் தேசத்தையும் காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு 'தேசபக்தி' என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு‘சுதந்திர தினத்தை’ கொண்டாடும் வாய்ப்புக் கூட நாட்டின் வீரர்களுக்குக் கூட வழங்காதிருப்பது ‘தி லீடர்’க்கு தெரியவந்துள்ளது.

பெப்ரவரி 4ஆம் திகதி வழமைபோன்று சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துமாறு வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு கடந்த டிசம்பர் 16ஆம் திகதி பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் செலவுகளைக் குறைக்குமாறு வௌிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல். பீரிஸ் தூதரகங்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்கள் சுதந்திர தினத்தன்று நூற்றுக்கணக்கான குடிமக்களால் நிரம்பியிருக்கும், அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக தூதரகங்களுக்கு செல்வது அசாதாரணமான ஒன்றல்ல.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் துபாய் மற்றும் தென்கொரியாவிற்கு விஜயம் செய்து, ஜனவரி மாதத்தில் மட்டும் அன்னிய செலாவணியை செலவிட்டதன் நோக்கம் என்ன என வெளிநாட்டு ஊடக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரே நாடு, ஒரே சட்டம் - கோத்தாவின் நண்பர்களுக்கு ஒரு விசேட சட்டம்

இதற்கிடையில், வெளியுறவுச் செயலர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, அனைத்து தூதரகங்களுக்கும் புதன்கிழமை (ஜனவரி 12) அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த உதவித்தொகை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

தூதரகங்களுக்கான பிரதிநிதித்துவ மானியங்கள் ஒவ்வொரு நாட்டின் அதிகாரிகளுடனும் உறவுகளை வலுப்படுத்துதல், இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தகம், அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளில் உத்தியோகபூர்வ வெகுமதிகளை வழங்குதல் போன்ற முக்கிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

2001 ஆம் ஆண்டு வரை செலுத்தப்பட்ட அதே தொகையுடன், செலவின பில்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்  திருப்பிச் செலுத்தப்படும் என்றும் இராஜதந்திரிகள் கூறுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, உலகின் மிக சனநெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றான தென் கொரியாவின் சியோலில் உள்ள தூதரகத்திற்கான அதிகபட்ச மாதாந்த கொடுப்பனவு $ 700 அமெரிக்க டொலர்கள் ஆகும். அந்தத் தொகை இரண்டு பேர் சாப்பிடுவதற்குக் கூட போதாது.

'விதிவிலக்கான சந்தர்ப்பங்களில்' இந்த வரம்பு மீறப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் வெளியுறவு சேவையில் மூத்த அதிகாரிகள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இது இப்படி இருக்க,

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சஞ்சீவ குணசேகர, இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தூதுவர் மல்ராஜ் டி சில்வா, ஜேர்மனி தூதுவர் மனோரி உனம்புவா, அமெரிக்காவுக்கான தூதுவர் மொஹான் பீரிஸ் மற்றும் மஹிந்த சமரசிங்க போன்ற வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கான சிட்னி கான்சல் ஜெனரல் லக்ஷ்மன் ஹுலுகல்ல போன்றவர்களுக்கு தடையின்றி எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யும் ஆற்றல் உள்ளது இவர்கள் ராஜபக்ஷவின் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் நற்பெயரை உயர்த்த திரைமறைவில் மாபெரும் சேவை செய்து வரும் அனைத்து ராஜதந்திரிகளின் செலவுகளையும் குறைத்துள்ளனர்.

IMG 20220114 WA0002

IMG 20220114 WA0001IMG 20220114 WA0001

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி