தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கில் காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு புகையிரதம் நேற்று (09) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கொழும்பு - ஹொரணை பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் பர்னாஸ் ஏரியில் சுற்றுலாவாசிகள் சிலர் படகு ஒன்றில் நேற்று பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.  இந்த நிலையில், அங்கிருந்த குன்று ஒன்றின் ஒரு பகுதியாக இருந்த பெரிய பாறை ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு கொள்கலன்களை ஏற்றிய சுமை ஊர்தியை துரத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கூறுவது சிரிப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோமென வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.

நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி சிறுபான்மையினரை ஒடுக்கும் இந்திய பிரதமரிடமிருந்து ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும்  மக்கள் நீதியைப் பெறக் கூடாது என கிழக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என பிரபல பல்தேசிய நிறுவனம் ஒன்று தொழில் ஆணையரிடம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 10 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திசக்குட்டி ஆராய்ச்சி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இந்த அறிக்கை மிகவும் தீவிரமானது எனவும்  முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி