தான் அதிகாரத்திற்கு வந்தால் உறவினர்கள் நண்பர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி கோத்தாபய தேர்தலுக்கு முன்பு கூறினாலும், இன்று அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தான் வாக்குறுதிகளுக்கு புறம்பாக உறவினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகிறார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல்துறையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக மேற்கு கப்பல்துறையை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கருத்தைக் கேட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றது.

சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாக இராணுவப் பயிற்சி வழங்க இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் எனவும் கூறினார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆளும் கட்சி அரசாங்கத்தின் மீது நுட்பமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழ் இலக்கியங்களை வளப்படுத்துவதிலும், சிங்கள இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடிப் பாத்திரத்தை வகித்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா நேற்று (28) காலமானார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, உண்மையான தேசபக்தர் அமைப்பின் மங்கள சமரவீர, ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் 43 பிரிவின் பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோர் இணைந்து புதிய முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக செயற்படவுள்ளனர்.

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள, அன்செல் லங்கா நிறுவன நிர்வாகம், ஏழு வருடங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் ஜனவரி 21ஆம் திகதி ஒரு புதிய சர்வதேச ஒத்துழைப்பு பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்டாய தகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி முஸ்லிம் இடது முன்னணி இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

முருத்தெட்டுவே தேதரின் பிறந்தநாள் விழாவின் போது நாட்டிலுள்ள மூன்று கேள்விகளுக்கான பதில் கிடைத்தது

நீதித்துறையில் முறையான நிர்வாகம் இல்லாததால் ரஞ்சன் சிறையில் அடைக்கப்பட்டாரா?

"நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைகிறோம், ஏனென்றால் மீனவர்களாகிய அவர்கள் மீன்பிடி குடும்பங்களின் அவலநிலையை அறிந்திருக்கின்றோம், அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்களாக இருந்தாலும், எங்கள் சகோதரர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம் . "

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட தமிழ் அரசியல் ஓரணியில் இணைந்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி