விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 இராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று காலை, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார சேவைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அமைச்சின் செயலாளர் அவை குறித்து பேசாதிருக்கும் நிலையில் அல்லது அவை குறித்து எதுவுமே அறியாதவராகக் காட்டிக் கொண்டிருக்கும் போது, சுகாதார அமைச்சரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமரோ சுகாதார நிபுணர்களுக்கு அறிவிக்காமல் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பதாகவும், இவர்களுக்குத் தெரியாமல் ஜனாதிபதி முடிகள் எடுப்பதாகவும் நிறைவுகாண் மருத்துவத் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இன்று (05)ம் திகதி  அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்சின் இராணுவ விமான விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96-பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு மதுபான உற்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட மெண்டிஸ் நிறுவனம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை இதுவரை செலுத்தாததுடன், செலுத்தப்பட வேண்டிய 14 பில்லியன் வரியும் இதுவரை செலுத்தப்படவில்லையென செய்திகள் கூறுகின்றன.

இலங்கை காவல் நிலையங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் சமூக அமைப்பு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

முதலீட்டுத் திட்டத்தின் மூலம் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை வர்த்தகர்களுக்கு வழங்கும் விடயத்தை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி