பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இன்று (05)ம் திகதி  அறிவித்துள்ளார்.

நீதிபதிகளான முர்து பெர்னாந்து, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த தனி மனுக்களை விசாரித்தது.

மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில்  நீதிபதி மஹிந்த சமயவர்தன, தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 08ம்  திகதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.

அதன்படி, இந்த மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகிய நான்காவது உச்ச நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன ஆவார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளுடனும் தொடர்பில்லாத தங்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்ற தீர்ப்பளிக்குமாறு கோரி அவர்கள் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள்.

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி ஏப்ரல் 24 காலை சிஐடியால் கைது செய்யப்பட்டதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

 

கைது செய்யப்பட்டதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறிய ரிஷாத் பதியுதீன், சிறுபான்மை அரசியல் கட்சியின் தலைவரான தன்னை தர்மசங்கடத்திற்குள்ளாக்கவும் பழிவாங்கவும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, எதிர்ப்பையும் தான்டி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதாகக் கூறுவது ஜனநாயகத்தின் இருப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று கூறினார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான மசோதாவை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்றும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளுக்கும் தனது கட்சி எதிர்ப்பு தெரிவிக்காது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், வரலாற்றில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மட்டுமே என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி