ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பசில் ராஜபக்ஷ, இன்று நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பொலிஸ் நிலையத்தில் சட்டத்தணி ஒருவரை தாக்க முயன்ற மற்றும் அவரது தொழில்முறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நண்பர் என நம்பப்படும் நபர் ஒருவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்று பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால இழப்பீட்டு நிதி கிடைத்துள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே கேட்பதில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குடும்பமொன்றை நடத்துவதற்கு 2,500 ரூபாய் மாதமொன்றுக்கு போதுமென்றார், நிவாரணம் வழங்கப்படும் என்றார். உரமானியம் வழங்கப்படும் என்றார் ஒன்றுமே நடைபெறவில்லை. ஆகையால், கொஞ்சம் அமருங்கள் என்றார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், சே.கலையமுதன் விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளையும், மக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதற்கு பொலிஸ் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. தொற்று நோய் காரணமாக அமுல் படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ் ஜனநாயக பயன்பாட்டிலிருந்து மக்களை அகற்றும் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் சேவைகள் ஊழியர் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.ஊழியர்கள் வேட்டையாடப்படுவதை நிறுத்துதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை கவனத்திலெடுக்குமாறு வலியுறுத்தி பொறியியல் கூட்டுத்தாபன கட்டிடத்தின் மேல் ஏறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறியக்கிடைக்கின்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி