சுகாதார சேவைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அமைச்சின் செயலாளர் அவை குறித்து பேசாதிருக்கும் நிலையில் அல்லது அவை குறித்து எதுவுமே அறியாதவராகக் காட்டிக் கொண்டிருக்கும் போது, சுகாதார அமைச்சரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமரோ சுகாதார நிபுணர்களுக்கு அறிவிக்காமல் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பதாகவும், இவர்களுக்குத் தெரியாமல் ஜனாதிபதி முடிகள் எடுப்பதாகவும் நிறைவுகாண் மருத்துவத் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது.

இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நிறைவுகாண் மருத்துவத் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஸ், தற்போது உருவாகியுள்ள நிலை தமது சேவைகளின் பெருமைக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர்,

தற்போதைய கொவிட் வைரஸ் ஒழிப்பில் அறிவியல் தரவுகளை திரட்டல், PCR பரிசோதனைகளை மேற்கொள்ளல், திரிபுகளை பரிசோதனை செய்தல், மக்களை ஒன்றுதிரட்டல், மருந்து விநியோகம் ஆகிய சகல கடமைகளையும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் செய்வதுடன், சுகாதார சேவையின் முதுகெலும்பை உடைத்து விட்டால் சுகாதார சேவை நிலைக்காதெனவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்தான் அந்த முதுகெலும்பென்றும் குமுதேஷ் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே, தமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிக்கு வரமுடியாதெனவும், ஒரே ஒரு சிறு விடயத்தை மாத்திரமே அதிகாரிகள் செய்ய வேண்டியுள்ளது. அதாவது, தாதியர் சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்ப்பில் சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை பத்திரத்தில் திறன்காண் மற்றும் துணை மருத்து சேவையையும் உள்ளடக்க வேண்டுமெனவும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி