இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் சனிக்கிழமை (10) மு.ப. 9.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

ஒரு காலத்தில் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் வசிப்பிடமாக இருந்த பகைச்சாவின் அதே அறையில் தற்போது அவரது வழக்கறிஞர் பீட்டர் மார்ட்டின் இருக்கிறார். இது பகைச்சாவின் (ஸ்டேன் சுவாமியின் அலுவலகம்) முதல் மாடியில் உள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும், பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றை மீண்டும் இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மூவரங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வீரகெட்டிய – போகமுவ குளத்திலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.30 மற்றும் 35 வயதான இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

29 பேருடன் சென்ற ரஷ்ய விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பார் ஈஸ்ட் பிராந்தியத்தில் 29 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பலனா  நகருக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. விமான சிப்பந்திகள் 6 பேருடன் 29 பேர் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் ஆகிய எனது மகனின் படு கொலைக்கு நீதிவேண்டும் என அவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.

நாட்டை கொண்டு செல்ல தேவையான நிதியை திரட்டிக்கொள்ள அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் தான் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது.

15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட மாலைதீவுகளின் முன்னாள் ராஜாங்க நிதி அமைச்சர் இம்மாதம் 16ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி